/* */

நாமக்கல்: போலீசார் வேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில், போலீசார் நடத்திய வேட்டையில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல்: போலீசார் வேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
X

நாமக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை , மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பீடாக்கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் மேற்பார்வையில், மாவட்டம் முழுதும் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் தலைமையில் விடிய விடிய தீவிர சோதனை நடைபெற்றது.

நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் வேட்டையில் ஈடுபட்டனர். போலீஸ், சோதனையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1,300 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் தடை செய்ப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்மந்தமாக 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் ரொக்க பணம், ஒரு கார் மற்றும் ஒரு டூ வீலர் ஆகிய வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

மாவட்டத்தில் குட்கா பான்மசாலா பொருட்கள் விற்பவர்கள், தாமாக முன் வந்து அந்தந்த போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படமாட்டாது. தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, கடந்த 23 ந் தேதி மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில், ரூ.29 லட்சம் மதிப்பிலான 2.70 டன் குட்கா மற்றும் ரூ. 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்ததுடன் 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 27 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  6. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  7. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  9. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  10. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!