/* */

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
X

பைல் படம்.

அரசு ஊழியர்கள் தங்கள் அரசு பணியை மேற்கொள்ள லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தங்களது அரசுப்பணியை மேற்கொள்ள, பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன.

நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையத்தில், திருச்செங்கோடு மெயின் ரோட்டில், நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில், யுகோ வங்கி மேல் தளத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அலுவலகம் செயல்படுகிறது. அரசு அலுவலர்கள் யாராவது லஞ்சம் கேட்டால், ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சுபாஷினியை, 94981 90735, 94450 48878 என்ற மொபைல் எண்களிலும், இன்ஸ்பெக்டர் நல்லம்மாளை 94450 48933 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலும், நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தை, 04286 281331 என்ற தொலைபேசி எண்ணிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை தலைமை அலுவலகத்தை, 044 22321090 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். கிடைக்கப்பெறும், தகவல் மற்றும் புகார்களின் அடிப்படையில் உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Feb 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?