/* */

இ-பாஸ் இல்லாமல் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லலாம் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இ-பாஸ் இல்லாமல் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லலாம் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்
X

டாக்டர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வந்தார். நிகழ்ச்சிக்குப்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள், இ-பாஸ் மற்றும் இ- பதிவு இல்லாமல் செல்லலாம். சுற்றுலா மையத்தில், 50 சதவீத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அங்கு, சுற்றுலா பயணிகளின் விபரங்கள் பதிவு செய்யப்படும்.

கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக, சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும், அனைவரும், மாஸ்க் அனிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நீர்வீழ்ச்சியை பொறுத்தவரைக்கும் அனைத்து நீர்வீழ்ச்சிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்லலாம், அங்கும் 50 சதவிகித நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் வல்வில் ஓரி விழா குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரப்பஞ்சோலை பகுதி மலைப்பகுதியாக இருப்பதால் செல்போன் நெட்வொர்க் கிடைக்காததால், ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து செல்போன் நிறுவனங்களிடம் பேசியுள்ளோம். விரைவில் பூஸ்டர்கள் மூலம் நெட்வொர்க் முறையாக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 5 July 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்