/* */

நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேர் தபால் மூலம் வாக்களிக்கிறார்கள்..?

நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேர் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேர் தபால் மூலம் வாக்களிக்கிறார்கள்..?
X

தபால் வாக்கு (கோப்பு படம்)

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் 34,779 மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளர்களில், 7,169 பேர் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் ஓட்டளிக்க உள்ளனர்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,105 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 1982 பேர் என மொத்தம் 4,087 பேர் உள்ளனர். இவர்களில் 977 பேருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், 2,461 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 2,736 பேர் என மொத்தம் 5,197 பேர் உள்ளனர். இவர்களில் 730 பேருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் தொகுதியில், 2,508 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 2,999 பேர் என மொத்தம் 5,507 பேர் உள்ளனர். இவர்களில் 1,287 பேருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

பரமத்திவேலூர் தொகுதியில், 2,525மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 2,881 பேர் என மொத்தம் 5,406பேர் உள்ளனர். இவர்களில் 1,283 பேருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்க 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு தொகுதியில், 2,665மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 3,070 பேர் என மொத்தம் 5,735பேர் உள்ளனர். இவர்களில் 1,159 பேருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் தொகுதியில், 1,836மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 2,571 பேர் என மொத்தம் 4,587பேர் உள்ளனர். இவர்களில் 510 பேருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம் சங்கிரி சட்டசபை தொகுதியில், 1,887 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 2,373 பேர் என மொத்தம் 4,260 பேர் உள்ளனர். இவர்களில் 510 பேருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகள் மற்றும், நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டசபை தொகுதியையும் சேர்த்து, மொத்தம் 7 தொகுதிகளில் 15,987 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 18,162 பேர் என மொத்தம் 34,779 பேர் உள்ளனர். இவர்களில் 7,159 பேருக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிப்பதற்காக 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது. 12டி படிவம் அளித்துள்ளவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று தபால் வாக்குகளை சேகரித்து அதற்கான பெட்டியில் சேர்ப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?