/* */

அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.18 லட்சம் இழப்பீடு தராததால் அதிகாரியின் கார் ஜப்தி

ரூ. 18 லட்சம் இழப்பீடு வழங்காததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரியின் காரை கோர்ட் அலுவலர்கள் ஜப்தி செய்தனர்.

HIGHLIGHTS

அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.18 லட்சம் இழப்பீடு தராததால் அதிகாரியின் கார் ஜப்தி
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த டிஆர்டிஏ திட்ட இயக்குனரின் காரை, கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

நாமக்கல் அடுத்த, சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (39) கூலி தொழிலாளி. அவரது தாயார் சந்திரா, (58). தங்கை வாசுகி (34). இவரது தந்தை ரங்கநாதனுக்கு சொந்தமான 87 சென்ட் நிலம், வீசாணம் கிராமத்தில் இருந்தது.

அந்த நிலத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், காலனி விரிவாக்கத்துக்காக, 1998 ம் ஆண்டு கையப்படுத்தப்பட்டது. அதற்காக ரூ. 87 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை குறைவாக இருப்பதாக அவர்கள் நாமக்கல் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட, 2018 ல் சதுர அடிக்கு ரூ. 12 ரூபாய் வீதம், ஆறுதல் தொகை 15 சதவீதம், மேலும் 9 சதவீதம் வட்டியுடன் வழங்க, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ரூ. 18 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் அந்த தொகையை வழங்கவில்லை.

அதையடுத்து 2019ம் ஆண்டு, கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 5 கார்களில் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கோர்ட் அமீனா மற்றும் அலுவலர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் காரை ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது, அங்கு வந்த அரசு அலுவலர்கள், கோர்ட் அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், அரசு டிரைவர் மாயமானதால், தனியார் டிரைவரை பயன்படுத்தி, திட்ட இயக்குனரின் காரை ஜப்தி செய்து, கோர்ட் வளாகத்தில் நிறுத்தினர்.

Updated On: 28 Aug 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு