/* */

புதிய ரேசன் கடைகள் அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம்: ஈஸ்வரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

Ration Shop- நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம்கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

புதிய ரேசன் கடைகள் அமைப்பதில் அதிகாரிகள்  மெத்தனம்: ஈஸ்வரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு
X

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றகூட்டத்தில். திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டனர்.

nkl collector office meeting mla complaint


Ration Shop-திருச்செங்கோடு பகுதியில் புதிய ரேசன் கடைகள் அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக, எம்எல்ஏ ஈஸ்வரன் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உணவு பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், சமையல் கேஸ் விநியோகம், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தரம், பயன்பாடு, தரத்தில் குறைபாடுகள் போக்குதல், காலாவதியான உணவு வகைகளை பயன்படுத்துதலை தடுத்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் பேக்கிங் செய்யப்படாத இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்களில் காலாவதியாகும் தேதி நுகர்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடாத கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள திட்டங்கள், திட்டங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது வெப்சைட் முகவரியை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். நுகர்வோர் வழங்கும் கோரிக்கை மனுவினை முறையாக பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

nkl collector office meeting mla complaint

பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களுக்கும் தரம் மற்றும் பயன்பாட்டிற்கான நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு அடைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசுத்துறைகள் அடிக்கடி நடத்த வேண்டும். அரசு மற்றும் கூட்டுறவுத்துறைகளின் இ-சேவை மையங்களில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இ- சேவைகள் வழங்கி வரும் தனியார் மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் புகார்களின் மீது ஆய்வு செய்யப்பட்டு அபாரதம் மற்றும் இயங்க தடை விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில், திருச்செங்கோடு கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன் கலந்துகொண்டு பேசியதாவது:

nkl collector office meeting mla complaint

திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, வாலரைகேட் மற்றும் கரட்டுப்பாளையம் ரேசன் கடையை பிரித்து, புதிய கடை அமைப்பது தொடர்பாக, கடந்த ஜூலை மாதம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளருக்கும், வட்ட வழங்கல் அலுவலருக்கும் அனுப்பிய கடிதத்துக்கு, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, உரிய பதிலும் கிடைக்கவில்லை. திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் உள்ள ரேசன்கார்டுகளை பிரித்து, கோம்பை நகர் பகுதியில் அமைத்து தரவும், அப்பகுதி மக்களே கட்டிடம் கட்டித்தர முன்வந்துள்ளது குறித்தும், செப்டம்பர் மாதம் கடிதம் அனுப்பியும், இதுவரை நட வடிக்கை இல்லை.

nkl collector office meeting mla complaintகொரோனா காலத்தில் பல வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பஸ்கள் முறையாக மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நிலம் அளவீடும் செய்யும் பணி 3 முதல் 6 மாதங்கள் ஆகியும் இன்னும் நிலுவையில் உள்ளது. நில அளவை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார். ஆளுங்கட்சி தரப்பில் சட்டசபை தேர்தலில்போடியிட்டு வெற்றிபெற்ற எம்எல்ஏ, ஈஸ்வரன் அரசு அதிகாரிகளை குறைகூறி பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Oct 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்