/* */

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் தேர் திருவிழா 8ம் தேதி துவக்கம்

நாமக்கல்லி அருள்மிகு பலபட்டறை பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா வருகிற 8ம் தேதி துவங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் தேர் திருவிழா 8ம் தேதி துவக்கம்
X

பைல் படம்.

நாமக்கல்லி அருள்மிகு பலபட்டறை பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா வருகிற 8ம் தேதி துவங்குகிறது.

நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற பலபட்டறை மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் சிறப்பபாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊராடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, வருகிற 8ம் தேதி காலை 8.30 மணிக்கு திரளான பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வருவார்கள். இரவு கோயில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறும். 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 15 ஆம் தேதி மறுகாப்பு, 22 ஆம் தேதி வடிசோறு, மாவிளக்கு பூஜை நடைபெறும். 23ம் தேதி அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், தேரோட்டம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறும்.

24 ஆம் தேதி மாவிளக்கு, பொங்கள் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், 25 ஆம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 26 ம் தேதி கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து தினசரி நகரின் பல்வேறு பகுதிகளில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பழனிவேலு, உதவி கமிஷனர் ஆணையர் ரமேஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

Updated On: 6 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  3. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  4. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  8. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை