/* */

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு
X

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள, 25 உள்ளாட்சி பதவிகளுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில், 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பதவிகளுக்கு, 63 பேர் களத்தில் உள்ளனர். வருகிற அக்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 1 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 5 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 25 பதவிகளுக்கு, மொத்தம் 109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 5 மனுக்கள் நிராகரிப்பட்டன. 31 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 8 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள், போட்டயின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

தற்போது மீதமுள்ள 15 பதவிளுக்கு வருகிற அக்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 1 மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், 1 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், 3 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 14 பேரும், 10 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 29 பேரும் போட்டியில் உள்ளனர். மொத்தம் 15 பதவிகளுக்கு 63 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 26 Sep 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்