/* */

ஜேடர்பாளையத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு

ஜேடர்பாளையம் அருகே அடுத்தடுத்து நடைபெற்ற தீ வைப்பு சம்பவங்களில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீடு உள்ளிட்ட பல்வேறு வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

ஜேடர்பாளையத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு
X

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 50). இவருடைய மனைவி பூங்கொடி (40). அதிமுகவைச் சேர்ந்த இவர் வடகரையாத்தூர் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார்.

சம்பவத்தன்று இரவு, வைத்தியநாதன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு பின்புறம் வழியாக வந்த மர்ம நபர்கள் வைத்தியநாதன் தூங்கிக் கொண்டிருந்த அறை மற்றும் சமையல் அறையின் ஜன்னல், கண்ணாடி மீது 4 மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதனால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து தீப்பிடித்து எரிந்தன. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து வைத்தியநாதன் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:

ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியை சேர்ந்த வக்கீல் துரைசாமி (57) என்பவர் சொந்தமாக வெல்லம் தயாரிக்கும் ஆலை வைத்துள்ளார். இந்த ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வந்தனர். அவர்கள் தங்குவதற்காக ஆலை உரிமையாளர் 10 சிறிய வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். மேலும் ஆலை அருகில் கொட்டகை அமைத்து அதில் 3 டிராக்டர்கள், ரொட்டாவெட்டர் மற்றும் கரும்பு வெட்டும் எந்திரம் ஆகியவற்றையும் நிறுத்தி வைத்திருந்தார்.

இதற்கிடையே ஹோலி பண்டிகை மற்றும் ஆலையில் வேலை இல்லாததால் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் ஆலை மூடப்பட்டு வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில் சம்பவத்தன்று, நள்ளிரவு கொட்டகைக்கு பின்புறம் சென்ற மர்ம நபர்கள் வீடுகளின் மேற்கூரை மற்றும் கொட்டகைக்கு தீ வைத்தனர்.

இதில் அங்கிருந்த 10 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. கொட்டகைக்குள் நிறுத்தியிருந்த 3 டிராக்டர்கள், ரொட்டாவெட்டர், கரும்பு வெட்டும் எந்திரங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு ஓடி வந்த துரைசாமி டிராக்டரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது மேற்கூரையில் எரிந்து கொண்டிருந்த தீ துரைசாமி மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார். அவர் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்னொரு சம்பவம்:

புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (55) என்பவருக்கு சொந்தமான குடிசைக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதுகுறித்து நாமக்கல் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் குடிசையில் இருந்த 10 மூட்டை அரிசி, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன.

ஜேடர்பாளையம் பகுதியில் அடிக்கடி நடைபெறும் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், சேலம் மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி . கலைச்செல்வன், ப.வேலூர் டிஎஸ்பி கலையரசன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பாதுகாப்பு பணிகள் குறித்தும், தீ வைத்த மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 23 March 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...