/* */

கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்: நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சிறுபான்மையினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்: நாமக்கல் ஆட்சியர்
X

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களாக இருப்பின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை வழங்கப்படும். கைவினைக் கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடன் பெற தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Jun 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை