/* */

நாமக்கல்: கூட்டுறவு சொசைட்டி உறுப்பினராக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் உறுப்பினராக சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

நாமக்கல்: கூட்டுறவு சொசைட்டி உறுப்பினராக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
X

இது குறித்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் உறுப்பினராக சேரலாம். விண்ணப்பபடிவத்தை, தாங்கள் குடியிருக்கும் பகுதியில் அல்லது தங்களது நிலம் இருக்கும் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு போட்டோ-2, ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் அல்லது ரேசன் கார்டு நகல் ஆகியவற்றுடன் பங்குத் தொகை ரூ.100 மற்றும் நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்திற்கு நேரில் சென்று செலுத்தி உறுப்பினராகிக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத சூழ்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம்.

பதிவுத்தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பும்போது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் பங்குத்தொகை, நுழைவுக் கட்டணத்திற்கான தொகையினை போஸ்டல் ஆர்டர் மூலமாக செலுத்தி அதன் ரசீது எண், செலுத்தப்பட்ட தபால் அலுவலக பெயர், பெயர், முகவரி ஆகியவற்றையும் சேர்த்து, சங்கத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விவசாயிகளும், பொதுமக்களும் தாங்கள் சார்ந்துள்ள பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி, சங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 July 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!