/* */

மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்: நாமகிரிப்பேட்டை பகுதியில் ஆட்சியர் நேரில் ஆய்வு..

Namakkal District Collector -நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்: நாமகிரிப்பேட்டை பகுதியில் ஆட்சியர் நேரில் ஆய்வு..
X

அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் ஸ்ரேயா சிங்.

Namakkal District Collector -தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்களில், சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்னரே மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் நாளில் தீர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள ஊனந்தாங்கல் ஊராட்சியில் நடைபெற உள்ள மக்கள் தொடர்புத் திட்ட முகாமை முன்னிட்டு, பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில், அனைத்துத் துறைகளின் மூலம் கள ஆய்வு பணிகள் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஊனந்தாங்கல் ஊராட்சிக்கு சென்ற ஆட்சியர் ஸ்ரேயா சிங், கீரைக்காடு கிராமத்தில் ரோட்டின் ஓரத்தில் மழைநீர் வடிகால் வசதி கேட்டு வந்த கோரிக்கையின்படி நேரடியாக கள ஆய்வு செய்தார்.

மேலும், கீரைக்காடு பகுதிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மயானத்திற்கு ரோடு வசதி ஏற்படுத்த தேவையான நிலம், நிலத்தின் விவரங்கள் குறித்து அ பதிவேடு, கிராம புலப்படம் உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு உடனடியாக தயார் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்,

தொடர்ந்து, வரகூர் கோம்பை கிராமத்தில் உள்ள வீடுகளில் தனித்தனியே கழிப்பிட வசதி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களை பார்வையிட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்க சுகாதார நர்சுகள் வீடுகளுக்கு வருகை குறித்தும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மலை கிராமத்தில் தன்னார்வலர்கள் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்துது வருவதையும், பொதுமக்களிடம் கேட்டு உறுதி செய்தார்.

பெரிய வரகூர் கோம்பை கிராமம், கொளக்கமேடு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பேசுகையில், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரத்த அழுத்தம் நேரில் வந்து ஆய்வு செய்து, அந்த மாதத்திற்குரிய மாத்திரைகளை பயனாளிகளின் வீடுகளுக்கே வந்து வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொலைதூர கிராமப் பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்று வருவதை உறுதி செய்தார். பெரிய வரகூர் கோம்பை கிராமம், கொளக்கமேடு கிராமங்களில் மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த வருவாய் மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கொளக்க மேடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் ஸ்ரேயா சிங், அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டு வளர் இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு வழங்கப்படுவதை உறுதி செய்தார்.

மேலும், தொலைதூர கிராமங்களில் உள்ள வளர்இளம்பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதாரம் மற்றும் உடல் நலம் பேணுவதில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தினார்.

இதுதவிர, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் தேவைக்காக வைக்கப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், சத்து குறைபாடு உடைய குழந்தைகளை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்படி கண்டறிந்து ஊட்டத்சத்து மருந்து வழங்க அறிவுறுத்தினார்.

ஆய்வுகளின்போது, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், வட்டாட்சியர் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Nov 2022 11:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!