/* */

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பேசினார்.

அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் முழுவதும் 17- 10- 2022 திங்கட்கிழமை அன்று கழக கொடி ஏற்றி ஆங்காங்கே உள்ள அண்ணா, எம் ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவது. 19ஆம் தேதி கழக பொதுக்கூட்டம் அல்லித் துறையில் சிறப்பாக நடத்துவது.

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பணியினை சிறப்பாக மேற்கொள்வது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் இத்தருணத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியினை மீண்டும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் தலைமையில் அமைத்திட அனைவரும் பாடுபடுவோம் என சபதம் ஏற்பது. மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, கழக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் அறிவழகன் விஜய், ரமேஷ், கண்ணதாசன், புல்லட் ஜான், விவேக், அன்பு பிரபாகரன், ஏவூர் நாகராஜன், துரைராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், நடராஜன், ஜெயக்குமார், ராஜமாணிக்கம், ஆமூர் ஜெயராமன்,ஜெயக்குமார், ஆதாளி, சேனை செல்வம், ராம் மோகன், செல்வராஜ், ஜெயம், குமரவேல், பிரகாசவேல், நகர செயலாளர்கள் சுப்ரமணியன், அமைதி பாலு, பேரூராட்சி செயலாளர்கள் செந்தில், சம்பத்குமார், துரை சக்திவேல், கிட்டு, ராஜேந்திரன், ராஜாங்கம், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Oct 2022 12:37 PM GMT

Related News