/* */

கூலி பிரச்சினையால் திருச்சியில் தக்காளி கிலோ ரூ.100க்கு உயர வாய்ப்பு

தொழிலாளர் கூலி பிரச்சினையால் திருச்சியில் தக்காளி கிலோ ரூ.100க்கு உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

கூலி பிரச்சினையால் திருச்சியில் தக்காளி கிலோ ரூ.100க்கு உயர வாய்ப்பு
X

தமிழகத்தில் உள்ள முக்கியமான பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றாக திருச்சி காந்திமார்க்கெட் உள்ளது. தேச பிதா மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டதால் இந்த மார்க்கெட்டிற்கு காந்திமார்க்கெட் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. திருச்சி காந்திமார்க்கெட்டில் இருந்து தான் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டும் இன்றி புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் பல்வேறு சுற்று வட்டார மாவட்டங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு தக்காளி லோடுகளை இறக்க விடாமல் போராட்டம் நடத்தினார்கள். அதாவது தக்காளி வரும் 25 கிலோ பெட்டியை லாரியில் இருந்து இறக்கி கொடுக்க 9 ரூபாய் 75 பைசா வரை இருந்த கூலியை அதிகம் கேட்டு தக்காளி லோடுகளை இறக்கவில்லை.

மேலும் திருச்சிக்கு தக்காளி கொண்டுவரும் வியாபாரிகளும் தொழிலாளர்கள் தொழிலாளர் யூனியனும் பேச்சுவார்த்தை நடத்தி காலை ஏழு மணிக்கு மேல் தான் தக்காளிகளை இறக்கினார்கள். மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது பேச்சுவார்த்தையில் கூலி உயர்வுக்கு தக்காளி மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்ட நிலையில் தொழிலாளர்கள் சார்ந்த அமைப்புகள் காலக்கெடுவுக்கு உடன்பாடு இல்லை என்கிற காரணத்தினால் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தக்காளி லோடுகளை திருச்சிக்கு கொண்டு வரமாட்டோம் என்று காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் 12-10-22 இன்றைய தினமே தக்காளி விலை கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை அதிகம் விற்கிறது.நேற்று முன்தினம் ரூபாய் 30 க்கு விற்ற தக்காளி இன்று ரூபாய் 50 க்கும் 60க்கும் விற்கிறது. இனி வரும் நாட்களில் இது மாதிரியான போராட்டம் தொடர்ந்தால் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு கூட விற்கும் நிலைமை ஏற்படும்.

இது தொடர்பாக காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தமிழக முதல் அமைச்சருக்கு மெயில் மூலம் அனுப்பி உள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூலி உயர்வு என்பது வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினை .அதை சுமூகமாக பேசி தீர்த்து கொள்வது அவர்களுடைய கடமை. இதில் அமைப்பு ரீதியாக தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்துகிறார்கள். மேலும் எமது சங்கத்தில் சில்லறை வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் தக்காளி உள்ளிட்ட பலதரப்பட்ட காய்கனி வியாபாரம் செய்கிறார்கள்.

இந்நிலையில் சில்லரை வியாபாரிகளான நாங்கள் தக்காளி லோடு கொண்டு வந்தால் அதை இறக்க விடமாட்டோம் என்று தொழிலாளர்களும் வியாபாரிகளும் தடுக்கிறார்கள். கூலி உயர்வு என்பது தொழிலாளர்களின் உரிமை. அதை கொடுப்பது முதலாளிகளின் கடமை.

மேலும் பண்டிகை காலம் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் பொதுமக்கள் வாடுகிறார்கள். இந்நிலையில் சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் தக்காளி வரவை நிறுத்தினால் விலை அதிகமானால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

இன்றுடன் இந்த போராட்ட பிரச்சனை முடிவுக்கு வர வில்லை என்றால் இன்று இரவு சில்லரை வியாபாரிகள் நாங்கள் ஒன்று சேர்ந்து தக்காளி லோடுகளை வரவழைப்போம் தக்காளி லோடு களை இறக்கி குறைந்த விலையில் விற்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்களும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதனை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 12 Oct 2022 1:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு