/* */

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.40 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.40 கோடி மதிப்பில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில்  ரூ.1.40 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்
X

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (என்.சி.எம்.எஸ்) வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், பரமத்தி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 4,300 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்காணாபுரம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொõள்முதல் செய்தனர்.

ஆர்.சி.எ.ச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,269 முதல் ரூ.9,460 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி ரூ. 9,003 முதல் ரூ.9,900 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ. 9,069 முதல் ரூ.9,500 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.3,999 முதல் ரூ.7,399 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.1.40 கோடி மதிப்பிலான பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 29 Jun 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?