ஐ.ஏ.எஸ்.தேர்வில் தேர்ச்சி பெற்ற தொழில் மைய உதவி பொறியாளருக்கு பாராட்டு

ஐ.ஏ.எஸ்.தேர்வில் தேர்ச்சி பெற்ற நாமக்கல் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஐ.ஏ.எஸ்.தேர்வில் தேர்ச்சி பெற்ற தொழில் மைய உதவி பொறியாளருக்கு பாராட்டு
X

ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற நாமக்கல் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமகிருஷ்ணசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

ஐ.ஏ.எஸ் தேர்வில், தேர்ச்சி பெற்ற, நாமக்கல் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமகிருஷ்ணசாமிக்கு, மாவட்ட சிறு தொழில்கள் சங்க தலைவர் இளங்கோ பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற, நாமக்கல் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளருக்கு, சிறுதொழில்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணசாமி, இவர் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. உதவி பொறியாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ். (யுபிஎஸ்சி) தேர்வில், இவர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது அதில், ராமகிருஷ்ணசாமி, தேசிய அளவில் 114வது இடமும், தமிழகத்தில் 2 வது இடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவருக்கு நாமக்கல் மாவட்ட சிறு தொழில் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடந்தது. நாமக்கல் மாவட்ட சிறு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் கோஸ்டல் இளங்கோ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ராமகிருஷ்ணசாமிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ரமேஷ், கோஸ்டல் கிராண்ட் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண், சேகோ பேக்டரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராஜா, ஆல் மோட்டார்ஸ் ஒர்க்ஷாப் ஓனர்ஸ் அசோஸியேஷன் தலைவர் விஜய குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாராட்டி பேசினார்கள். திரளான தொழில் அதிபர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 26 May 2023 12:00 PM GMT

Related News