/* */

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குடியரசு தினத்தன்று விடுமுறை  அளிக்காத 46 நிறுவனங்கள் மீது வழக்கு
X

பைல் படம்

நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் அறிவுறுத்தலின்படி, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால், அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன் அனுமதி பெற்று தொழில் நிறுவனம் செயல்படுகிறதா என்பது குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் பகுதியில், 28 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 16 கடைகளிலும், 48 ஹோட்டல்களை ஆய்வு செய்ததில் 26 ஹொட்டல்களிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களிலும், என மொத்தம் 83 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 46 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க அனுமதி பெறாததும் கண்டறியப்பட்டது.

இதையொட்டி சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு