/* */

தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு: முதல்வருக்கு கோரிக்கை

தேங்காய் விலை கடும் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காப்பாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் -கொமதேக வேண்டுகோள்

HIGHLIGHTS

தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு: முதல்வருக்கு கோரிக்கை
X

இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ.,

தேங்காய் விலை கடும் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பெதுச்செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில், எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தென்னை விவசாயிகள், விவசாயத்திற்கு செய்கின்ற முதலீட்டிற்கு கூட விலை கட்டுபடி ஆவதில்லை. ஒரு கிலோ ரூ. 18 ஆக இருந்த தேங்காய் தற்போது ரூ. 8 க்கு விற்பனையாகிறது. கொப்பரை ஒரு கிலோவிற்கு ரூ. 105.90 ஆதார விலையாக அரசு நிர்ணயித்து இருந்தாலும், வெளிச்சந்தையில் ரூ. 85க்கு தான் விற்பனையாகிறது. கொப்பரை கொள்முதலுக்கு அரசு விதித்திருக்கின்ற கட்டுப்பாடுகள் சிறு விவசாயிகளுக்கு உகந்ததாக இல்லை. அதனால் சிறு விவசாயிகள் ஒரு கிலோõரூ. 85க்கு வெளிச்சந்தையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அரசு அழைத்து, அவர்களின் கருத்துக்களை கேட்டு, தேங்காய் விலை வீழ்ச்சியிலிருந்து ஏழை விவசாயிகளை காப்பாற்றவேண்டும்.

தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த, தமிழக ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். தேங்காயை கீற்றுகளாக்கி சத்துணவுடன் கொடுக்க வேண்டும். கொப்பரை கொள்முதல் நிலையங்கள் அதிகப்படுத்த வேண்டும். தேங்காய்க்கு எடை அடிப்படையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாமாயில் இறக்குமதியை குறைக்க வேண்டும். தாமதம் இல்லாமல் தென்னை நல வாரியத்தை அமைக்க வேண்டும். விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 5 Jun 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்