/* */

நாமக்கல் மண்டலத்தில் முட்டை மீண்டும் 20 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 4.50

namakkal news, namakkal news today- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா சரிவடைந்தது. 8 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1 விலை குறைந்ததால். பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மண்டலத்தில் முட்டை மீண்டும் 20 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 4.50
X

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் முட்டை 20 பைசா சரிந்து, ஒரு முட்டை விலை ரூ. 4. 50ஆக உள்ளது. (கோப்புபடம்)

namakkal news, namakkal news today- நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

கடந்த ஜூன் 30ம் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.50 ஆக இருந்தது. கடந்த ஜூலை 1ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.40 ஆனது, 2 ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.30 ஆனது. ஜூலை 3ம் தேதி மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.20 ஆனது. 4ம் தேதி மீண்டும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.5 ஆனது. 5ம் தேதி மீண்டும் 30 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ. 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்து.

இதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு முட்டை விலை மாற்றம் செய்யப்படாது, ரூ. 4.70 தொடர்ந்து நீடிக்கும் என்று என்இசிசி அறிவித்தது. இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1 விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 530, பர்வாலா 392, பெங்களூர் 480, டெல்லி 410, ஹைதராபாத் 450, மும்பை 530, மைசூர் 570, விஜயவாடா 450, ஹொஸ்பேட் 440, கொல்கத்தா 490.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 108 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 82 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Updated On: 8 July 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  2. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  3. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  4. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  5. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  8. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  9. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  10. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து