/* */

வரும் 13ம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

நாமக்கல் மாவட்ட அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான, தடகளம் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகள் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

வரும் 13ம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான, தடகளம் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகள் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்ட பிரிவின் சார்பில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகள், வரும் 13ம் தேதி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தடகள விளையாட்டில், கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் 50 மீ., ஓட்டம், 100 மீ ஓட்டம், 50 மீ ஓட்டம், குள்ளமானோர் குண்டு எறிதல், 100 மீ சற்கர நாற்காலி ஆகிய விளையாட்டுகள் நடைபெறும்..

பார்வையற்றோர் பிரிவில் 50 மீ. ஓட்டம், 100 மீ ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், சாட் பால் ஆகியே போட்டிகள் நடைபெறும். மன நலம் பாதிக்கப்பட்டவர் பிரிவில் 50 மீ., 100 மீ., சாட் பால் எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், காது கேளாதோர் பிரிவில் 100 மீ. மற்றும் 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

குழு விளையாட்டு போட்டியில், கை, கால் ஊனமுற்றோர் (ஆண், பெண்), இறகு பந்து (ஒற்றையர், இரட்டையர்கள்), ஒரு குழுவுக்கு 5 பேர் வீதம் டேபிள் டென்னிஸ், பார்வையற்றோர் (ஆண், பெண்) வா லிபால், குழுவுக்கு 7 பேர், மனநலம் பாதிக்கப்பட்டோர் எறிபந்து, ஒரு குழுவுக்கு 7 பேர், காது கேளாதோர் (ஆண், பெண்), கபடி போட்டி, ஒரு குழுவுக்கு 7 பேர். ஆகிய போட்டிகள் நடைபெறும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 5 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  7. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!