/* */

புரட்டாசி முதல்ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புரட்டாசி முதல்ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
X

புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு,  நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, இன்று காலையில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 19 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  3. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  4. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  5. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  6. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  7. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  8. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  9. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  10. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்