/* */

புதுச்சத்திரம் வட்டார வளமையம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார வள மையத்தின் சார்பில், சமுதாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் வட்டார வளமையம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

வட்டார வள மையம் சார்பில், சமுதாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சத்திரம் வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மையம், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ், புதுச்சத்திரம் வட்டாரத்தில் 25 மையங்களில் 552 கற்போர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட்டது.

மேலும் படிப்பறிவு, எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் சமுதாய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி முகாம், புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பாச்சல் பொதுமக்கள் கூடுமிடம் ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் மற்றும் பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன், வட்டார கல்வி அலுவலர் கோபால கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தங்கமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில், குருசெய்தி என்ற நாடகம் மூலம், கல்வி அறிவின் அவசியத்தையும், சிலேட் என்ற கோமாளி கூத்து மூலம் கற்போம் எழுதுவோம் மையத்தில் சேர்ந்து பயன்பெறுவதன் அவசியத்தையும், தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மிப் பாட்டு மூலம் 1098 என்ற எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன், பெண் கல்வியின் அவசியத்தையும், மாணவ, மாணவிகளுக்கு தொடுதல் முறைகள் குறித்த விழிப்புணர்வையும் ஆடல், பாடல் மூலம் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சத்திரம் வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் மற்றும் உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Updated On: 28 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்