/* */

பருவமழை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக கலெக்டர் வேண்டுகோள்

வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

பருவமழை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக கலெக்டர் வேண்டுகோள்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். குமாரபாளையம் பகுதியில் ஜேகேகேஎன் மஹால், ஸ்ரீ ராஜேஸ்வரி மஹால் ஆகிய இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பள்ளிபாளையம் பகுதியில் செங்குந்தர் மண்டபம், நாட்டாக்கவுண்டம்புதூர் துவக்கப்பள்ளி, சமுதாய நலக்கூடம், ஆவாரங்காடு துவக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களில் உள்ள பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் நிவாரண மையங்களை கவனித்து வரும் மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர், குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். சூடான உணவுப் பொருள்களை மட்டுமே உண்ண வேண்டும். கெட்டுப்போன உணவுப் பொருட்களையும், ஈ மொய்த்த உணவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும். தங்கள் பகுதியைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் நிவாரண மையங்கள் உள்ளன. எனவே, மழை மற்றும் வெள்ள நேரங்களில் பொதுமக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 July 2022 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!