/* */

நாமக்கல் குளக்கரையில் தேர் கடை: திறப்பு விழா எம்.பி. ராஜேஷ்குமார் பங்கேற்று திறப்பு

நாமக்கல் குளக்கரையில் தேர் கடைகளை ராஜேஷ்குமார் எம்.பி. திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் குளக்கரையில் தேர் கடை: திறப்பு விழா எம்.பி. ராஜேஷ்குமார் பங்கேற்று திறப்பு
X

நாமக்கல் குளக்கரைத் திடலில் தேர் கடையை, ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.

நாமக்கல் குளக்கரைத் திடலில் தேர் கடையை ராஜேஷ்குமார் எம்.பி திறந்து வைத்தார்.

நாமக்கல் நகரில் புராண சிறப்புப் பெற்ற அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுரை நரசிம்மர் கோயில், ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தின் போது தேர்த்திருவிழா நடைபெறும். தேர்த்திருவிழாவின்போது ஒரே நாளில் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ அரங்கநாதர் ஆகிய முப்பெரும் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டு முப்பெரும் தேரோட்டம் கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. ஏற்கனவே தேர்த்திருவிழாவின்போது குளக்கரையில் உள்ள நாமகிரித்தாயார் மண்டபத்தில் இருந்து சுமார் 10 நாட்கள் சுவாமி வாகனங்களில் வீதி உலா துவங்கும். அதற்காக ஏராளமான பக்தர்கள் குளக்கரையில் கூடுவார்கள். இதையொட்டி அங்கு சுமார் 1 மாதம் வரை தேர்க்கடைகள் அமைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால், தேர்க்கடைகள் அமைக்கப்படவில்லை.

நாமக்கல் மெயின்ரோட்டில், பொதுமக்கள் கார் மற்றும் டூ வீலர் பார்க்கிங் வசதிக்காக உபயோகப்படுத்தி வந்த, குளக்கரைத்திடலில், இந்த ஆண்டு தேர் திருவிழா முடிந்தபிறகு, தற்போது தேர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவர் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை, சுமார் 80 நாட்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுவந்து தேர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் விழாவில் கலந்துகொண்டு தேர் கடையை திறந்து வைத்துப் பார்வையிட்டார். நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம், நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர தி.மு.க. செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 1 May 2023 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு