/* */

பி.டி. பருத்தி விதைகள் விற்பனை வழிமுறை: மண்டல விதை ஆய்வுத்துறை தகவல்

பி.டி. பருத்தி விதையின் தரத்தினை உறுதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

பி.டி. பருத்தி விதைகள் விற்பனை வழிமுறை: மண்டல விதை ஆய்வுத்துறை தகவல்
X

பைல் படம்.

பி.டி. பருத்தி விதையின் தரத்தினை உறுதி செய்து விற்பனை செய்ய வேண்டும் விதை ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் தற்÷ பாது பி.டி ரகம் உள்ளிட்ட பருத்தி விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பி.டி ரக பருத்தியில் சான்று பெற்ற விதைகள் மற்றும் உண்மை நிலை விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உண்மை நிலை விதைகளுக்கு உரிய பதிவுச்சான்றிதழ் மற்றும் முளைப்புத்திறன் அறிக்கைகள் பெற்று விதையின் தரத்தினை உறுதி செய்து விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். இதுபோல் பருத்தியில் காய்ப்புழு தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியுடைய பி.டி விதைகள் விற்பனையாளர்களும், விதையின் தரத்தினை உறுதி செய்து விற்பனை செய்ய வேண்டும்.

இதன்படி சம்பந்தப்பட்ட விதை உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்யும் ரகத்திற்கு மத்திய அரசின் மரபணு பொறியியற் அங்கீகரிப்புக் குழுவிடம் இருந்து பெறப்பட்ட சான்றின் நகல், கொள்முதல் பட்டியல் மற்றும் விற்பனை செய்யப்படும் விதைக்குவியலுக்கான முளைப்புத்திறன் அறிக்கை நகல் ஆகியவற்றை பெற்றபின் விற்பனை செய்யவேண்டும். மேலும் விதைகள் இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு பராமரிக்கப்படவேண்டும்.

இதன்மூலம் விற்பனை செய்யப்படும் பி.டி பருத்தி விதைகளின் தரத்தை உறுதி செய்வதுடன் மத்திய அரசின் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தியுடைய விதைகள் நமது மாநிலத்தில் நுழைவதை தடுக்க முடியும். மேலும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு உரிய விற்பனை ரசீது விற்பனையாளர் மற்றும் விவசாயின் கையொப்பத்துடன் வழங்கவேண்டும்.

இதில் குறைபாடு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விதை விற்பனையாளர்கள் மீது விதைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களை நாமக்கல், திருச்செங்கோடு விதை ஆய்வாளர்கள் விதை விற்பனை நிலையங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 20 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....