/* */

திமுக இளைஞரணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பம்: அமைச்சர் துவக்கம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திமுக இளைஞரணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பம்: அமைச்சர் துவக்கம்
X

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், திமுக இளைஞரணி பதவிக்கு விண்ணபம் செய்பவர்களிடம், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விண்ணப்பங்களைப் பெற்றார். அருகில் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின், மாநில தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூராட்சி அளவில் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

ஒவ்வொரு நகரம் மற்றும் ஒன்றிய அளவில் 1 அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். பேரூராட்சி அளவில் 1 இளைஞரணி அமைப்பாளர் மற்றும் 3 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்ட திமுகவினர் விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், இளைஞரணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளைஞரணி நிர்õவாகிகள் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, விண்ணப்பங்களைப் பெற்றார். திரளான இளைஞர்கள் விண்ணப்பங்களை அளித்தனர்.

நகர, ஒன்றிய, பேரூராட்சி ஆகியவற்றின் அமைப்பாளர் மற்றும் துணைஅமைப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வயதிற்கான சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை நகல் உள்ளிட்ட விவரத்தினை இணைத்து, வரும் ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களைப் பெற்று, காலை 9 மணிமுதல், மாலை 5 மணிவரைநாமக்கல், கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி, மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர ஆனந்த் பாபு ஆகியோரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

ஒன்றிய திமுக செயலாளர்கள் பழனிவேல், கவுதம், நவலடி, நகர செயலாளர்கள் ஆனந்த், பூபதி, சிவகுமார், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 2 July 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...