/* */

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம் அறிவிப்பு

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம் அறிவிப்பு
X

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய, வாக்குப்பெட்டிகளை, வாக்கு எண்ணும் மையத்தில் சீல் வைத்து பாதுகாப்பு அறையில் வைக்கும் பணிகளை, மாவட்ட கலெக்டர் உமா, தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஹர்கின்ஜித் கவுர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் முழு விபரம் வெளியாகியுள்ளது.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளனர், இவர்களில் 1,91,678 பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 74.32.

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,30,584 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,88,125 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 81.59.

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,90,592 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 78.08.

பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,70,180 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 77.26.

திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் 2,30,415 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,74,533 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 75.75.

சங்ககிரி சட்டசபை தொகுதியில் 2,69,270 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,20,138 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 81.75.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளையும் சேர்த்து 7,08,317 ஆண்கள், 7,44,787 பெண்கள், 158 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற தேர்தலில், 5,53,668 ஆண்கள், 5,81,525 பெண்கள், 53 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11 லட்சத்து 35 ஆயிரத்து 246 பேர் வாக்களித்துள்ளனர். நாக்கல் பாராளுமன்ற தொகுதி மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 78.16 ஆகும்.

நேற்று மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை, வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு, போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டன. அங்கு சட்டசபை தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை மாவட்ட கலெக்டர் உமா, தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஹர்கின்ஜித் கவுர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களுக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, இரவு பகல் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.இரவு பகல் 24 மணி நேரமும்

Updated On: 20 April 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை