/* */

நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மன்றத்தில் 2,605 வழக்குகள், ரூ.14.47 கோடி மதிப்பில் தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 2,605 வழக்குகளுக்கு, ரூ.14.47 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மன்றத்தில்  2,605 வழக்குகள், ரூ.14.47 கோடி மதிப்பில் தீர்வு
X

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை வகித்தார்.

நீதிபதிகள் பாலகுமார், கிருஷ்ணன், சுந்தரையா, ஜெயபிரகாஷ் மற்றும் தாலுக்கா அளவிலான சட்டப் பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜய் கார்த்திக் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகள், செக் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பரமத்திவேலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் 2018-ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அவரது மனைவி அம்சவள்ளி, மகள் மேகலா, மகன் கார்த்திக் ஆகியோருக்கு இழப்பீடாக ரூ.57 லட்சத்து 4 ஆயிரத்து 477 வழங்க உத்தரவிடப்பட்டது. சாலை விபத்தில் காயமடைந்த தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த அன்னகுமார் என்பவருக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது.

திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தம்க 4,051 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 2,605 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.14 கோடியே 47 லட்சத்து 40 ஆயிரத்து 842 மதிப்பில் பைசல் செய்யப்பட்டது.

Updated On: 15 Aug 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  2. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  3. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  4. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  5. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  6. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  7. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  10. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்