/* */

அரசு கலை கல்லூரி சார்பில் நாட்டுநலப் பணித்திட்டம் முகாம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்புமுகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

அரசு கலை  கல்லூரி சார்பில்   நாட்டுநலப் பணித்திட்டம் முகாம்
X

குமாரபாளையம்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்று வரும் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்புமுகாமில் பங்கேற்ற  குமாரபாளையம் கிளை நூலகர் சுப்பிரமணியம்

குமாரபாளையம்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்புமுகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித் திட்டம் சிறப்புமுகாம் முதல்வர் ரேணுகா தலைமையில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம் தூய்மை செய்தல், வெள்ளையடித்தல், திருவள்ளுவர் நகர், நடராஜா நகர் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்துதல், அங்குள்ள மாணவ , மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி, பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் துறையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தல், மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் என்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 50 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம் ஏப்.6 -வரை நடைபெறவுள்ளது.

இதில், குமாரபாளையம் கிளை நூலகர் சுப்பிரமணியம் பங்கேற்று, கல்வித்துறையில் நூலகங்கள் பங்கு என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர்கள் ஞானதீபன், பிரகாஷ், சரவணாதேவி உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ பருவத்தில் மன அழுத்தத்தை தவிர்த்து உளவியல் நலன் காக்க வேண்டும், கவன சிதறல்களை தவிர்த்து நிர்வாக திறமைகளை மேம்படுத்துவதற்கான உளவியல் சார்ந்த யுக்திகளை கையாள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பேராசிரியர்கள் கீர்த்தி, கண்ணன், காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.


Updated On: 4 April 2023 9:59 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி