/* */

குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

குமாரபாளையம் குள்ளங்காடு பகுதியில் விஜய் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி குமாரபாளையத்தில் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் தினமும் பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

விஜய் மக்கள் இயக்க நிறுவனர் விஜய் 48வது பிறந்தநாளையொட்டி குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் உள் நோயாளிக்கு பால், பழங்கள் வழங்குதல், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம், சத்யா நகர் அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு, பொதுமக்களுக்கு அன்னதானம், மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள், புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள் வழங்கல், கல்வி ஊக்கத்தொகை வழங்கல் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 3வது வார்டு பகுதியில் 48 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பஸ் ஸ்டாண்டில் 48 கிலோ கேக் கட் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நகர இளைஞரணி தலைவர் வேல்முருகன், செயலர் செல்வராஜ், பொருளர் பிரபு, நகர மாணவரணி தலைவர் நந்து, செயலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குள்ளங்காடு பகுதியில் சங்க பெயர்பலகை திறக்கப்பட்டது. மேற்கு மாவட்ட தொண்டரணி செயலர் பிரபு, வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 27 Jun 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?