/* */

குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றார் குமரன்

குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக குமரன் பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக  பொறுப்பேற்றார் குமரன்
X

குமாரபாளையம் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள குமரன்.

குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக குமரன் பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளராக இருந்த சரவணன், ஆரணி நகராட்சி ஆணையராக பணியிட மாறுதலில் சென்றார். இவருக்கு பதிலாக ஆரணி நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த குமரன், குமாரபாளையம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். குமாரபாளையம் நகராட்சி ஆணையராக குமரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

குமாரபாளையம் அம்மன் நகர் சாலை அமைப்பதில் மீண்டும் இழுபறி ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கடந்த 20 ஆண்டுகளாக நாராயண நகர், அம்மன் நகர் பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக, மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மிக மோசமான நிலையில் இருந்தது. தற்சமயம் இந்த சாலை அமைக்க நகர மன்ற தலைவரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. இருந்தாலும், பொதுப்பணித்துறையிடம் இருந்ததால், நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் முழுமையாக சாலை அமைக்க தொடர்ந்து இடையூறாக இருந்ததாக கூறப்பட்டு, இதனால் சாலை குறுகலாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிற்சாலைகள் மிகுந்த அந்த பகுதியில், ஓர் இடத்தில் அகலமாகவும், ஒரு இடத்தில் குறுகலாகவும் போட்டால், லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர மிகவும் இடையூறாக இருக்கும். எனவே அனைத்து இடங்களிலும் ஓரே மாதிரியான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Updated On: 19 March 2024 12:33 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  3. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  4. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  6. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  8. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  9. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...
  10. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?