/* */

கட்டுமான பணியால் இட நெருக்கடியில் தவிக்கும் குமாரபாளையம் பஸ் நிலையம்

கட்டுமான பணியால் இட நெருக்கடியில் குமாரபாளையம் பஸ் நிலையம் தவித்து வருகிறது.

HIGHLIGHTS

கட்டுமான பணியால் இட நெருக்கடியில் தவிக்கும் குமாரபாளையம் பஸ் நிலையம்
X

குமாரபாளையம் பஸ் நிலையத்தில் நெருக்கடியில் நிற்கும் பேருந்துகள்.

குமாரபாளையம் பஸ் நிலையத்தில் புதுப்பிக்கும் பணி துவங்கியதால், பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றியும்,இறக்கியும் செல்ல இட நெருக்கடியாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சில நாட்களாக மேலே போடப்பட்ட சிமெண்ட் அட்டைகள் அகற்றப்பட்டன. பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டு, பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் அனைத்தும் டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வந்தனர். பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, அதில் தங்கள் கடைகளை இடமாற்றம் செய்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக வரும் பஸ்கள், டூரிஸ்ட் கார்கள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், மார்க்கெட்டிற்கு காய்கறி கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் என பல தரப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றியும்,இறக்கியும் செல்ல இட நெருக்கடியாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Feb 2024 4:06 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  3. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  4. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  8. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  9. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்