/* */

குமாரபாளையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரச்சாரம்

குமாரபாளையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர்   தேர்தல் பிரச்சாரம்
X

குமாரபாளையம் அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில்  ஒரு டீக்கடையில் டீ போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

குமாரபாளையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், ஓட்டு போட அத்தாட்சி சீட்டு வழங்குவதற்கான பணிகள், ஆகியன செயல்படுத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்து முடிந்துள்ள நிலையில் ஏப்.7ல் அடுத்த கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. போலீசாரும், இதர துறை அலுவலர்களும் பறக்கும் படையில் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் வடக்கு நகர பொறுப்பாளர் மற்றும் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையிலும், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையிலும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வீடு வீடாக தி.மு.க. அரசின் சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில், விசைத்தறி கூடங்களில் சென்று வாக்கு சேகரித்தனர். ஒரு டீக்கடையில் டீ போட்டு நகர செயலாளர் பாலசுப்ரமணி தேர்தல் பிரச்சாரம் செய்தார். இரு கட்சியினரின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 April 2024 12:44 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு