/* */

குமாரபாளையம் பகுதி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு

Annabishekam-குமாரபாளையம் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

HIGHLIGHTS

Annabishekam
X

Annabishekam

Annabishekam-ஐப்பசி மாத பவுர்ணமி நாளில், ஆண்டுதோறும் சிவாலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும், அன்னம் வழங்குபவர் சிவபெருமான், அனைவருக்கும் ஆண்டு முழுதும் நிறைவான அன்னம் கிடைத்திட வேண்டி, அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

அவ்வகையில், குமாரபாளையம் பகுதி சிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பவானி ஊராட்சி கோட்டை மலை சிவன் கோவில், குமாரபாளையம் காளியம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம், காய்கறி அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 March 2024 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  3. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  5. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  9. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்