/* */

குமாரபாளையத்தில் சாலை மறியல் 60 பேர் கைது :;க்ரைம் செய்திகள்

குமாரபாளையம் அருகே குடிநீர் வழங்காதது கண்டித்து நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட60 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

Salem Rowdy
X

Salem Rowdy

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி பொன்னி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகத்தால் இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 15நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை என்பதால், திருசெங்கோடு சாலையில் நேற்று காலை 08:30 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். குமாரபாளையம் போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் சமாதன பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகினர். 50 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மனைவியை கத்தியால் குத்தியவர் கைது

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் விஜயமேரி, 36. இவரது கணவர் பெத்தனியார், 40. மனைவி மீது சந்தேகம் கொண்டு இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. நவ. 6 மாலை 06:00 மணியளவில் அரிசி மாவு வாங்குவதற்காக விஜயமேரி கடைக்கு வந்தார். அப்போது வழியில் வந்த தெரிந்த நபர் ஒருவருடன் இவர் பேசிக்கொண்டு இருக்க, அங்கு வந்த கணவர் தகாத வார்த்தையில் திட்டியதுடன், விஜயமேரியின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். வலியால் சத்தம் போட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதைக்கண்ட கணவர் பெத்தனியார் அங்கிருந்து தப்பி ஓடினார். விஜயமேரி ஈரோடு ஜி.ஹெச்.ல் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தப்பியோடிய கணவரை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

செங்கல்லால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் சரண்

குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் வசிப்பவர், உமாராணி, 29. கூலி. இவரது கணவர் நடராஜ், 36. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 4 மற்றும் 2 படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். மூத்தவன் அப்பா வசமும், இளையவன் அம்மா வசமும் இருந்து வருகின்றனர். உமாராணிக்கு தகாத உறவு இருப்பதால் நீ வராவிட்டாலும் பரவாயில்லை, தன் இரண்டாவது மகனை தன்னிடம் கொடுத்து விடு என பால்முறை கேட்டு, உமாராணி தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 09:00 மணியளவில் தன் மனைவியை பார்த்து, தன் மகனை கேட்க, மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் இருவருக்குள் தகராறு ஏற்பட, ஆத்திரத்தில் செங்கல்லை எடுத்து மனைவியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். பலத்த அடிபட்டு, உமாராணி சம்பவ இடத்தில் பலியானார். பிரேதம் குமாரபாளையம் ஜி.ஹெச். சவக்கிடங்கில் உள்ளது. மனைவியை கொலை செய்த நடராஜ், போலீஸ் ஸ்டேஷன் வந்து சரணடைந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 Dec 2022 3:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...