/* */

இலங்கை சிறையில் இருந்த 5 மீனவர்கள் விடுதலை- நாகை வந்தடைந்தனர்

கொரோனா காரணமாக இலங்கையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு நாகை வந்து சேர்ந்தனர்.

HIGHLIGHTS

இலங்கை சிறையில் இருந்த 5 மீனவர்கள் விடுதலை- நாகை வந்தடைந்தனர்
X

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்  நாகைக்கு வந்து சேர்ந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இலங்கை அரசால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் 18 மீனவர்கள் கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் வந்தடைந்தனர்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக இலங்கையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகை தந்த மீனவர்கள் இன்று சொந்த ஊரான அக்கரைப்பேட்டை கிராமத்திற்கு வந்தடைந்தனர். நாகை மீன்பிடி துறைமுகம் வருகை தந்த மீனவர்களை உறவினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் சால்வை அணிவித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவிய ஒன்றிய அரசிற்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ள விடுதலையான மீனவர்கள், இலங்கையில் சிக்கியுள்ள விசைப்படகுகளை விரைந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 3 Dec 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...