/* */

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் தம்பதிகள்

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதிகளுக்கு காந்தி மியூசியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும்  சைக்கிளில் வலம் வரும் தம்பதிகள்
X

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் தம்பதி

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதிகள் மதுரை வந்த பொது பாரதி யுவகேந்திரா மற்றும் காந்தி மியூசியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித், அவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் உலக அமைதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் சைக்கிளில புறப்பட்டுள்ளனர்.

சைக்கிள் ஓட்டியபடியே மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் சென்று பின்னர் தமிழகத்தில் கோவை வந்தனர். கோவையில் இருந்து , திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்று விட்டு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக நேற்று ராமேசுவரம் வந்தனர். அதைத்தொடர்ந்து இன்று மதியம் மதுரை காந்தி மியூசியம் வந்தனர்.

அவர்களுக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மற்றும் காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மகாத்மாகாந்தியின் சுய சரிதை புத்தகம் வழங்கி கௌரவித்தனர்.

இது பற்றி ரோகித்-அஞ்சலி தம்பதி கூறுகையில் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிள் ஓட்டியப்படியே செல்ல திட்டமிட்டுள்ளோம். லடாக்கில் எங்கள் பயணத்தை முடிக்க உள்ளோம். ராமேசுவரம், தனுஷ்கோடி வரை சென்று விட்டு மீண்டும் மதுரை வந்துள்ளோம். பாளையம் தென்காசி வழியாக கேரளா சென்று அங்கிருந்து மீண்டும் தமிழகம் வழியாக தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 22 Jun 2023 6:53 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  7. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  10. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?