/* */

பணியின்போது இறந்த காவல் ஆய்வாளருக்கு அரசு மரியாதை

அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள், கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்

HIGHLIGHTS

பணியின்போது இறந்த காவல் ஆய்வாளருக்கு அரசு மரியாதை
X

திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளர் திருமங்கலம் மேலஉரப்பனூரில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளரின் இறுதிச்சடங்கு திருமங்கலம் மேலஉரப்பனூரில் நடைபெற்றபோது காவலர்கள் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குண்டுமணி. இவரது மகன் சிவா.இவர், திருச்சியில் உளவுத்துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், நேற்று திடீரென பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காவல் ஆய்வாளர் சிவா உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலஉரப்பனூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு, அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள், கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, திருமங்கலம் காவல் துணைக்கண்காணிப்பாளர் வசந்தகுமார், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பணியின் போது உயிரிழந்த மதுரையை சேர்ந்த, காவல் ஆய்வாளர் சிவாவிற்கு அவர்களது ஊர் வழக்கப்படி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சீனி தலைமையிலான போலீசார் காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க தமிழக அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் அவருக்கு இறுதிக் கடமையை நிறைவேற்றினர்.

Updated On: 12 April 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...