/* */

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் வாகன ஓட்டி யார்?: ஓட்டுனரா, தலையாரியா?

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் வாகனத்தை ஓட்டுனர் ஓட்டாமல், கிராம நிர்வாக தலையாரி வாகனத்தை இயக்குவதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் வாகன ஓட்டி யார்?: ஓட்டுனரா, தலையாரியா?
X

வட்டாட்சியர் வாகனத்தை இயக்கும் கிராம தலையாரி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியருக்கு அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வதற்கு அரசு சார்பாக பொலிரோ ஜீப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை இயக்குவதற்கு, ஓட்டுனர் ஒருவரையும் அரசு நியமித்துள்ளது. ஆனால் ,கடந்த சில ஆண்டுகளாக வட்டாட்சியர் வாகனத்தை ஓட்டுனர் ஓட்டவில்லை எனவும், அதற்கு பதில் திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக தலையாரி வாகனத்தை இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

தலையாரி கிராம நிர்வாக அலுவலகம் செல்லாமல், வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும், மேலும், எந்த வட்டாட்சியர் வந்தாலும், இவர்தான் வாகனத்தை இயக்குவதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இவரது தலையீடு அதிக அளவில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்பும் சில கேள்விகள்:

  • அரசு நியமித்த ஜீப் டிரைவர் எங்கே? தலையாரிக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள், இரட்டை சம்பளம் பெறுகிறாரா?
  • அரசு வாகனத்தை இயக்குவதற்கு தலையாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? எந்த ஒரு வட்டாட்சியர் வந்தாலும், இவரே வாகனத்தை இயக்குவதற்கு காரணம் என்ன?
  • வட்டாட்சியருக்கு இவர், வாகனத்தை இயக்குவது தெரியாதா? ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியாளர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்திய காரணத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 9 Aug 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...