/* */

மதுரை பகுதி கோயில்களில் ராமநவமி விழா: பக்தர்கள் பரவசம்..!

மதுரை கோயில்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

மதுரை பகுதி கோயில்களில் ராமநவமி விழா: பக்தர்கள் பரவசம்..!
X

மதுரை அண்ணாநகர் தாசில் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் ,ராம நாமி விழா.

மதுரை.

மதுரை பகுதி கோயில்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

மதுரை நகரில் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயிலில், ராமநவமியையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர், பூதேவி, தேவி ஆகியோருக்கு பக்தர்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதேபோல், மதுரை தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயத்தில் உள்ள பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், ராமநவமியை ஒட்டி, பக்தர்களுக்கு பிரசாதம் கோயில் நிர்வாக சார்பில் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ராம நவமியை, ஒட்டி ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சணமும், அர்ச்சணைகள், தீபாராதனைகள் நடைபெறும்.

பக்தர்கள் பலர் ராமர், சீதா தேவியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். அண்ணா நகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், விளாங்குடி வழிபடு வழிவிடும் பெருமாள் ஆலயத்திலும், கருப்பட்டி பெருமாள் ஆலயத்திலும், மதுரை கூடலகப் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆகிய கோவில்களிலும் முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு நடைபெற்றது.

Updated On: 17 April 2024 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்