/* */

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஆக. 2 ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய புகார்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது

HIGHLIGHTS

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஆக. 2  ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
X

மதுரை மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆகஸ்ட் 2 -ல் நடைபெறவுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் அவர்களிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, எதிர்வரும் 02.08.2022 (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலம் 4 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

(மண்டலம் 4 (தெற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.29, செல்லூர், வார்டு எண்.30 ஆழ்வார்புரம், வார்டு எண்.41 ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு எண்.43 பங்கஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்துராமய்யர் ரோடு, வார்டு எண்.45 காமராஜபுரம், வார்டு எண்.46 பழைய குயவர்பாளையம், வார்டு எண்.47 சின்னக்கடை தெரு, வார்டு எண்.48 லெட்சுமிபுரம், வார்டு எண்.49 காயிதேமில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85 கீழவெளிவீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87 வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.88 அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தாமணி, வார்டு எண்.90 கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகள்)

இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 July 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு