/* */

கொரோனா தடுப்பில் அனைத்து கட்சி கருத்தை கேட்டு தீவிர பணி: அமைச்சர் மூர்த்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாளை அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டு அதனை செயல்படுத்த உள்ளோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பில் அனைத்து கட்சி கருத்தை கேட்டு தீவிர பணி: அமைச்சர் மூர்த்தி
X

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தபோது.

மதுரை விமான நிலையத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனவை தடுப்பதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தளவில் நாளை நானும் நம்முடைய நிதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் அதைப்போல மாணிக்கம் தாகூர் உசிலம்பட்டி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்தரநாத், போல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் பாகுபாடில்லாமல் கொரேனா தடுப்பு நடவடிக்ககையில் ஈடுபட உள்ளோம்.

மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து போர்க்கால அடிப்படையில் கொரோனாவை கட்டுபடுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மதுரை அரசு மருத்துவமனை மட்டுமல்ல மேலூராக இருந்தாலும், திருமங்கலமாக இருந்தாலும் அத்தனை அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய அந்த படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு இன்றைக்கு தனியார் மருத்துவமனைகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பு ஊசி 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்பதற்காக இங்கு அழைத்து இருக்கிறோம். அதன்படி வெகுவேகமாக இந்த பணியில் ஈடுபட்ட உள்ளோம் என அமைச்சர் மூர்த்தி கூறினார்,

Updated On: 12 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்