/* */

மதுரை நகரில் பல்வேறு குற்றச ம்பவங்கள்: போலீஸார் விசாரணை

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

மதுரை நகரில் பல்வேறு குற்றச ம்பவங்கள்: போலீஸார் விசாரணை
X

பைல் படம்

வாளால் மிரட்டி பார் ஊழியரிடம் வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்கள் கைது:

பூந்தமல்லியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஜனார்த்தனன்(39.).இவர் பார் ஊழியர் ஆவார்.இவர் சின்ன சொக்கிகுளம் டிரைவிங் ஸ்கூல் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை இரண்டு வாலிபர்கள் வழிமறித்து வாளால் மிரட்டி அவரிடமிருந்து ரூ 2ஆயிரத்தை வழிப்பறி செய்து தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜனார்த்தனன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஒத்தக்கடை பசும்பொன் நகர் முருகேசன் மகன் அஜித் குமார்( 24,), வாடிப்பட்டி கொண்டையம்பட்டி செல்வம் மகன் ராஜா(36 )ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஆனையூரில் கத்தி முனையில் வழிப்பறி: மூன்று வாலிபர்கள் கைது:

சிம்மக்கல் முத்திருளப்ப பண்டிதர் தெருவை சேர்ந்தவர் கோபி(40.). இவர் ஆனையூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை மூன்று வாலிபர்கள் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். அவர் சட்டப்பையில் வைத்திருந்த பணம் ரூ 850ஐ பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கோபி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆனையூர் காளியம்மன் கோவில் வடக்கு தெரு முருகேசன் மகன் வீரணன்( 27 ),அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அழகு பாண்டி( 30,) செல்லன் மகன் சண்முகநாதன்( 22 )ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பழங்காநத்தத்தில் கொசுவர்த்தி ஏற்றிய போது சேலையில் தீப்பிடித்து பெண் மரணம்:

பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் செங்குன்றம் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் இந்திரா 52. இவர் வீட்டில் கொசுவர்த்தி பற்ற வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றி மலமல வென்று எரியத்தொடங்கியது. இதில் கருகிய இந்திராவை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மகன் விஷ்ணுவர்தன் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திராவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பலகாரன்பட்டியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை.

மதுரை அம்பலகாரன்பட்டி வளர் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அய்யாவு மகன் முத்துப்பாண்டி( 21.). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா சுந்தரி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் முத்துப்பாண்டி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தத்தநேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை செய்த மூதாட்டி கைது

மதுரை தத்தநேரி எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி( 62.) இவர் இங்கு பெட்டிக்கடை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்தார்.இந்த தகவல் அறிந்த செல்லூர் போலீசார் அவரது கடையில் திடீரென்று சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பாக்கெட்டுகள் 52 ஐபறிமுதல் செய்து மூதாட்டி ஈஸ்வரியை கைது செய்தனர்.


மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்த 10 பெண்கள் கைது:

மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் அருவருக்கும் விதமாக உடையணித்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 10 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் பேருந்து நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் அருவருக்கும் விதமாக பெண்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். பலமுறை போலீசார் எச்சரித்தம் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதனால் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் சமூக நல அலுவலருமான மணிமேகலை புகாரில் போலீசார் அதிரடியாக 10 பெண்களை கைது செய்தனர். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே சிக்னலிலும், ஆவின் போக்குவரத்து சிக்னலிலும், மேலமடை போக்குவரத்து சிக்னலிலும் அருவருக்கும் விதமாக உடை அணிந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சக்கிமங்கலம் மல்லம்மா( 26,) கல்மேடுசாரதா(20 ) கல்மேடு மஞ்சுளா( 22,) உள்பட 10 பேரை அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர்.

வைகை வடகரை மேலத்தோப்புவில் கஞ்சா மற்றும் பணத்துடன் இளம்பெண் கைது:

மதுரை வைகை வடகரை மேல தோப்பில் கஞ்சா மற்றும் பணத்துடன் விற்பனை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். வைகை வடகரை மேலத்தோப்பு சர்வீஸ் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ரகசியமாக கண்காணித்தபோது கே டி கே தங்கமணி நகர் 5வது தெருவை சேர்ந்த பிச்சைமணி மனைவி வீரலட்சுமி 29 என்பவர் கஞ்சா விற்பனை செய்தார். அவரை பிடித்த போலீசார் அவரிடம் இருந்து ஒன்னேகால் கிலோ கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூபாய் 14 ஆயிரத்து 700 ஐயும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


Updated On: 4 Dec 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!