/* */

மதுரை அருகே மேலூரில் உதயநிதி நடித்த திரைப்படக்காட்சி: அமைச்சர் மூர்த்தி

மேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் காட்சியை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார்

HIGHLIGHTS

மதுரை அருகே மேலூரில்  உதயநிதி நடித்த திரைப்படக்காட்சி: அமைச்சர் மூர்த்தி
X

மேலூர் கணேஷ் திரையரங்கில்  உதயநிதி ஸ்டாலின் நடித்த சினிமாவை வரவேற்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் காட்சியை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார்.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கணேஷ் காம்ளைக்ஸ் திரையரங்கில், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி, திரைப்படத்தின் முதல் காட்சியை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார்.

முன்னதாக படம் திரையிடப்படுவதயொட்டி, திரையரங்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகியும், மேலூர் நகர்மன்ற உறுப்பினருமான ரிஷி தலைமையில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் திமுகவினர் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து திரைப்படத்திற்கான டிக்கெட் மற்றும் இணைப்புகளை ரசிகர்களுக்கு வழங்கிய வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திமுக நிர்வாகிகளுடன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்து ரசித்தார். இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் கூறும்போது: வித்தியாசமான மாற்று திரைக்களத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பதாகவும், இதுபோன்று திரைத்துறையிலும், அரசியலிலும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என தெரிவித்தனர்..

Updated On: 20 May 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!