/* */

ஜல்லிக்கட்டு அனுமதியை ஆட்சியர்கள் வழங்க அதிகாரம் வேண்டும்- ஜல்லிக்கட்டு பேரவை

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு கொடுக்கவேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை கோரிக்கை.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு அனுமதியை ஆட்சியர்கள் வழங்க அதிகாரம் வேண்டும்- ஜல்லிக்கட்டு பேரவை
X

மதுரை கோமதிபுரம் தனியார் மஹாலில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக, மாநில தலைவர் இராஜசேகரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டுக்களையும், முதல்வரின் செயல்பாடுகள் தமிழக முன்னேற்றத்திற்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு அனுமதி பெற மாவட்ட ஆட்சியரிடம் அணுகினால் மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பின்னரே ஆணை பிறப்பிக்கிறார். வருங்காலங்களில் அரசிதழ் பதிவு பெற்ற ஊர்களுக்கு அரசின் அனுமதி கேட்டு கடிதம் கேட்டவுடன் மாவட்ட ஆட்சியரே அனுமதி வழங்கும் விதமாக அரசிதழில் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மதுரை மாவட்டம் மேலூர் உறங்கான்பட்டி போன்ற கிராமங்களில் தொடர்ச்சியாக மஞ்சுவிரட்டு நடைபெற்று வந்ததற்கான ஆதாரங்கள் காட்டிய பிறகும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் இதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராக ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரனுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்களை வாசித்தார் ஜல்லிக்கட்டு பேரவை இளைஞர் அணி தலைவர் அவனிமாடசாமி, வழக்கறிஞர் கோபால் செல்லத்துரை திருமுருகன் ராமகிருஷ்ணன் விஜய பாண்டியன் குணசேகரன் தேவர் எழில்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 20 Dec 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  2. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  3. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  5. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  6. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  7. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...