/* */

மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மினி மாரத்தான் போட்டி

செய்திமக்கள் தொடர்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட மினி மாராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்  மினி மாரத்தான் போட்டி
X

மதுரையி்ல் செய்தி மக்கள்தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற மினிமாரத்தான்போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள்

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு செய்திமக்கள் தொடர்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட மினி மாராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (24.03.2022) சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மினி மாராத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா கொண்டாட்டங்கள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக,சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன்பெறும் வகையில் புகைப்படக்கண்காட்சி கலைநிகழ்ச்சிகள் மாணவ மாணவிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டியை, மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்தார்கள். இந்த ஓட்டப்போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலிதளபதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  3. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  4. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்