/* */

கிருஷ்ணகிரி: அனைத்து வட்டாரங்களிலும் மண் மாதிரி சேகரிப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: அனைத்து வட்டாரங்களிலும் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
X

கோப்பு படம்

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகளை சேகரிக்கும் முகாம் நடத்தவும், மண் மாதிரிகளை சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட மண் பரிசோதனை நிலையங்கள் மூலமாக உடனுக்குடன் ஆய்வு செய்து மண்வள அறிக்கை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராம விவசாயிகள் காரிப் பயிர் சாகுபடிக்கு முன்பாக மண் பரிசோதனை செய்துகொள்ளலாம். நிலத்தை தயார் செய்து, மண் பரிசோதனை முடிவின்படி, உரம் இட்டால் செலவு குறையும். நோய் தாக்குதல் குறையும். மண் பரிசோதனை ஒன்றுக்கு கட்டணம் ரூ. 20 ஆகும்.

விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடைக்கு பின், உழவிற்க முன் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 இடங்களில் ஆங்கில எழுத்தான "வி" வடிவ குழிகள் அரை அடி, முக்கால் அடி ஆழத்திற்கு எடுக்க வேண்டும். அந்த குழிகளில் பக்கவாட்டில் உள்ள மண்ணை மேலிருந்து கீழாக சேகரிக்க வேண்டும்.

அவ்வாறு சேகரித்த மண்ணை நிழலில் உலர்த்தி, கல், வேர் முதலான பொருட்களை தவிர்த்து அதை தூளாக்கி பகுதி பிரித்தல் முறையில் அரை கிலோ மண்ணை சேரிக்க வேண்டும். அந்த மண்ணை துணிப்பையில் இட்டு, அதில் விவசாயியின் பெயர், முகவரி, புல எண், பாசன, பயிர் சாகுபடி விவரம் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் வழங்க வேண்டும்.

இந்த மண்ணில் பிரச்சனைகள் இருந்தால், அவற்றை தீர்வு காண பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. மண் மாதிரி எடுத்தல் மற்றும் பரிசோதனை தொடர்பான விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என்று, வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கிருஷ்ணகிரி #soil #sampling #camp #District #வட்டாரம் #மண்மாதிரி #சேகரிப்பு #முகாம் #sample #govt

Updated On: 9 Jun 2021 7:02 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!