/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 உள்ளாட்சி பதவிகளுக்கு 66 பேர் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 பதவிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 உள்ளாட்சி பதவிகளுக்கு  66 பேர் வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 30 உறுப்பினர் பதவிக்கும், நல்லூர், பின்னமங்கலம், கண்டகானப்பள்ளி ஊராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் காலியாக உள்ள 18 பதவிகளுக்கு என மொத்தம் 22 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 15ம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று வரை மொத்தம் 66 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, பர்கூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண்.30க்கு திமுக வேட்பாளர் எல்லப்பன், அதிமுக வேட்பாளர் முகுந்தன், பாமக வேட்பாளர் வேலாயுதம் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதே போல் ஓசூர் ஒன்றியம் நல்லூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 7 பேரும், தளி ஒன்றியம் பின்னமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 4 பேரும், கெலமங்கலம் ஒன்றியம் கண்டகானப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 4 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், இதே போல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, பர்கூர் ஒன்றியம் பிஆர்ஜி.மாதேப்பள்ளி வார்டு எண்.1க்கு 3 பேரும், பண்டசீமனுர் வார்டு எண்.7க்கு ஒருவரும், ஓசூர் ஒன்றியம் அச்செட்டிப்பள்ளி வார்டு எண்.சுக்கு 4 பேரும், தும்மனப்பள்ளி வார்டு எண்.6க்கு 4 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிளாலம் வார்டு எண்.11க்கு 3 பேரும், கண்டகானப்பள்ளி வார்டு எண்.சுக்கு சு பேரும், குந்துமாரனப்பள்ளி வார்டு எண்.2க்கு 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி வார்டு எண்.8க்கு ஒருவரும், கட்டிகானப்பள்ளி வார்டு எண்.புபுக்கு 6 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் வார்டு எண்.5க்கு 3 பேரும், தோரிப்பள்ளி வார்டு எண்.3க்கு ஒருவரும், அலூர் வார்டு எண்.8க்கு ஒருவரும், பி.குருபரப்பள்ளி வார்டு எண்.1க்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தளி ஒன்றியம் சாரகப்பள்ளி வார்டு எண்.1க்கு ஒருவரும், ஊத்தங்கரை ஒன்றியம் சந்திரப்பட்டி வார்டு எண்.6க்கு 2 பேரும், கல்லாவி வார்டு எண்.புக்கு 3 பேரும், வேப்பனஹள்ளி ஒன்றியம் எண்ணேகோள் வார்டு எண்.9க்கு 2 பேரும், பாலனப்பள்ளி வார்டு எண்.சுக்கு 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், 3 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 15 பேரும், 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 43 பேரும் என மொத்தம் 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Updated On: 22 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்