/* */

கந்து வட்டி ஒழிப்பு தின உறுதிமொழி சமூக ஆர்வலர்கள் ஏற்பு

கந்து வட்டி வசூலிப்பது ஒழிக்கும் விதமாக கரூரில் கந்துவட்டி ஒழிப்பு தின உறுதிமொழி பல்வேறு அமைப்பினரால் ஏற்கப்பட்டது.

HIGHLIGHTS

கந்து வட்டி ஒழிப்பு தின உறுதிமொழி சமூக ஆர்வலர்கள் ஏற்பு
X

கரூரில் கந்து வட்டி ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் சமூக ஆர்வலர்கள்.

கரூரில் கந்துவட்டியை ஒழிக்கும் வகையில் இன்று கந்து வட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. நெல்லையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கந்து வட்டி கொடுமையால் இசக்கி முத்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து, கரூரில் உள்ள சாமானிய மக்கள் நலன் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் அக்டோபர் 23 ம் தேதியை கந்து வட்டி ஒழிப்பு தினம் கடைபிடித்து வருகின்றனர். இதையொட்டி, கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாமானிய மக்கள் நலக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வாழ்க விவசாயிகள் இயக்கம், தலித் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கந்து வட்டி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தொடர்ந்து கந்து வட்டியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மற்றும் கந்து வட்டி குறித்த புகாரில் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பலர் பேசினர்.

Updated On: 23 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...