/* */

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆலோசனை
X

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆலோசனை நடத்தினார்.

கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகளுக்கு விளக்க கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில், மாவட்ட போலீஸ் எஸ்.பி. முனைவர் பிரபாகர், முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில். வேட்புமனுத்தாக்கல் 20.03.2024 அன்று துவங்குகின்றது. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் 27.03.2024 ஆகும். 28.03.2024 அன்று வேட்புமனு பரிசீலனை- வேட்புமனுவை திரும்பப்பெறும் நாள் 30.03.2024. தேர்தல் நடைபெறும் நாள் 19:04.2024 ஆகும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 04.06.2024.

வேட்பாளர்கள் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் போது வேட்பாளர்கள் தங்களுடன் நான்கு நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும். வேட்பாளர் தங்களது வேட்புமனுவினை படிவம் 2-ல் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்களை மட்டுமே தாக்கல் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒரு முன் மொழிபவர் போதுமானது. மற்ற வேட்பாளர்களுக்கு 10 நபர்கள் முன்மொழிய வேண்டும். முன்மொழியப்படும் நபர்களின் பெயர்கள் அந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

படிவம் 26 ல் அபிடவிட் (கலங்கள் முழுமையாக பூர்த்தி செய்து, முதல் வகுப்பு நடுவர் / நோட்டரி பப்ளிக் அனைத்து பக்கங்களிலும் ஒப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்). வேட்பாளர் தனது வேட்புமனுவினை 23.கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், கரூர் அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்), கரூர் ஆகியோர்களிடம் 20.03.2024 முதல் 27.04.2024 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.27.03.2024 பிற்பகல் 03.00 மணி வரைவேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் நாள் 28.03.2024வேட்பு மனுவினை திரும்ப பெற கடைசி நாள் 30.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணி வரை. வேட்பாளர்கள் தங்களது பிரமாண பத்திரத்தை (ரூ.20/- மதிப்புள்ள பத்திரம்) தெளிவாக எழுதியோ / தட்டச்சு செய்தோ சமர்ப்பிக்கலாம். பிரமாண பத்திரத்தில் உள்ள அனைத்து கலங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எந்தவொரு கலமும் பூர்த்தி செய்யாமல் காலியாக இருத்தல் கூடாது. பிரமாணப் பத்திரத்தில் உள்ள கலம் 8 (1) – குறிப்பிடப்பட்டுள்ளவாறு. வேட்பாளர்கள் தங்களால் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். பிரமாண பத்திரத்தில் காலியாக உள்ள காலத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் தேதிக்கு முன்பாக சரிசெய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கலின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி/அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் அதிகாரம் பெற்ற நபரால் மையினால் கையொப்பம் இடப்பட்ட அசல் படிவம் A மற்றும் B சமர்ப்பிக்க வேண்டும். நகல்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.

தொலைநகலி /மின்னஞ்சல் மூலம் வரப்படும் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக உறுதிமொழி எடுக்க வேண்டும் அல்லது அதிகாரம் பெற்ற அலுவலர் முன்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறும்பட்சத்தில் மனு தாக்கல் செய்த பின்பு பரிசீலனைக்கு முதல் நாள் வரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்கலுக்கான கட்டணம் 25,000/-. தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு கட்டணம் ரூ.12.500/- (சாதிச் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்). வேட்பு மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டு (பாகம் VI) பெற்றுக்கொள்ள வேண்டும். வேட்பாளரது பெயர் வேறு பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருப்பின் அதற்கான சான்றிட்ட ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனுவினை திரும்ப பெற விரும்பினால் படிவம் 5 ல் தாக்கல் செய்ய வேண்டும். சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாளான 30.03.2024, பிற்பகல் 03.00 மணிக்கு பின்னர் நடைபெறும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பாகவே, வேட்பாளர் ண வகை ண்பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் முகவர் பெயரில் கூட்டாகவோ தனியே ஒரு வங்கி கணக்கு தொடங்கி அதில் தேர்தல் செலவினங்களை அக்கணக்கு மூலமாக மட்டுமே பராமரிக்க வேண்டும்.

தேர்தல் செலவினங்களை குறிப்பதற்கான குறிப்பேடு பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், வேட்பாளர் தேர்தல் செலவு கணக்குகளை கவனிப்பதற்காக கூடுதலாக ஒரு முகவரை நியமித்து கொள்ள வேண்டும். தேர்தல் தொடர்புடைய இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பெற்றுக்கொள்ள வேண்டும். படிவம் 8 – தேர்தல் முகவர் நியமன படிவத்தினை பெற்று ஒரு வார காலத்திற்குள் பூர்த்தி செய்து திரும்ப தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். படிவம் -தேர்தல் முகவர் நியமனத்தை ரத்து செய்யும் படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவரிடம் தங்களது மாதிரி கையொப்பத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் வேட்பு மனுவுடன் கடந்த மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தினை சமர்பிக்க வேண்டும். படிவம் 26ல் வேட்பாளருக்கு எதிரான கிரிமினல் வழக்கு அல்லது கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற விபரம் குறிப்பிட்டிருப்பின் அதனை படிவம் சி1ல் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் வாக்குபதிவு நாளுக்கு முன்பு குறைந்தது மூன்று முறை செய்தித்தாள்களிலும், தொலைகாட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும். மேற்படி படிவம் சி1ல் விளம்பரம் செய்ய வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் படிவம் சி3ல் நினைவூட்டு அனுப்பப்படும். இவ்வாறு விளம்பரம் செய்த விபரத்தினை படிவம்-சி4ல் வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான .தங்கவேல் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .கண்ணன், தனித்துணை ஆட்சியர் சைபுதீன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையத்காதர். தேர்தல் வட்டாட்சியர் .முருகன் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 March 2024 4:01 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்